இறைவனின் திருப்பெயரால்……
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீது நீடி நிலவட்டுமாக…
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக…..
இன்று வெள்ளிக்கிழமை 01.05.2020 | சித்த மருந்து- கபசுரக் குடிநீர் மற்றும் முகமூடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக பாரதிதாசன் நகர் கம்பர் 2வது குறுக்கு தெரு ஆலப்பாக்கம் மதுரவாயல் பகுதியில் வசிக்கும் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது..தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவுறுத்தலின் படி சித்த மருந்து- கபசுரக் குடிநீர் எங்கள்
- சார்பாக கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக * வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் வருகை தந்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு எங்கள் ** சார்பாக மனமார்ந்த நன்றி.
குறிப்பு:- இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி பொது மக்கள் ஒருவருக்கொருவர் உரசாமல் தூரத்தை பேணு மாறும், கைகளில் சுத்திகரிப்பு திரவத்தை உபயோக்கும் முறைகளையும் மற்றும் தொற்றுநோய் பரவாமல் இருக்க மூக்கினை மறைக்கும் கவசம் பயன்படுத்தும் முறைகளையும் அறிவுறுத்தப்பட்டது.
சிறப்பு குறிப்பு:- இந்த நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் சுத்தம் செய்து கொடுத்த நமது தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியத்திற்காகவும் அவர்களது குடும்பத்தினர் ஆரோக்கியத்திற்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் முனைவர்: எம்.முகமது மூஸா…
எல்லா புகழும் இறைவனுக்கே…..




Recent Comments