இறைவனின் திருப்பெயரால்….
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…..
உதவும் உள்ளங்கள் சமுக அறக்கட்டளை சார்பாக……
19-6-2023 திங்கள் கிழமை…
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…..
ஜெமினி பிரிட்ஜ்.கோடம்பாக்கம் பிரிட்ஜ்.டிடிகே சாலை. மயிலாப்பூர் முண்டக கண்ணகியம்மன் கோவில் ரயில் நிலையம். மெரினா பேருந்து நிலையம்.பூக்கடைபேருந்து நிலையம். போன்ற பகுதிகளில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள்.மற்றும் மாற்று திறனாளிகள் . மற்றும் சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் முதியோர்களுக்கும்.பெரியவர்களுக்கும்.பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 150 நபர்களுக்கு பெரிய பிரட் பாக்கெட் மற்றும் 500 ml தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது….
மேலும் வீடுகள் இன்றி சாலையோரத்தில் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு மழை வெள்ளத்தால் எந்த ஒரு சிரமும் ஏற்படாமல் இருப்பதற்கு இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
மேலும் இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்…..
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம்)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர்
முனைவர் எம்.முகமதுமூஸா….
எல்லா புகழும் இறைவனுக்கே……..
Recent Comments