சென்னை மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள் என 25 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்கள் இந்த மாதமும் வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்…..

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32)

17-2-2024 சனிக்கிழமை…

உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக…..

சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்…. மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்… பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்…. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் என்று 25 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்கள் மாதந்தோறும் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.. இறைவனின் கிருபையால் இந்த மாதமும் வழங்கப்பட்டது….. எல்லா புகழும் இறைவனுக்கே

இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…

( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )

சாலையோர வசிக்க கூடிய மக்களுக்கு உணவு .போர்வை.பிரட்.மற்றும் தண்ணீர் பாட்டிலும் மேலும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவியாகவும்….. பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாகவும்…. யாருடைய ஆதரவுமின்றி வசித்து வரும் வயதானவர்களுக்கு மருத்துவ உதவியாகவும்…மாற்றுதிறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறோம் …. நீங்களும் உதவி செய்ய விரும்பினால் கூகுள் பே மூலியமாகவோ அல்லது போன் பே மூலியமாகவோ தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய எண்
சமூக ஆர்வலர்
9600174634

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் முனைவர் எம்.முகமது மூஸா….

எல்லாப் புகழும் இறைவனுக்கே…..

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *