இறைவனின் திருப்பெயரால்….
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக……
இன்று 9-4-2023 சென்னை….
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் இரண்டு ஆப்ரேஷன் செய்த நிலையிலும் தலையில் நீர் சுரந்து கொண்டிருக்கிறது மேலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் மறுபடியும் நேற்று ஒரு ஆப்ரேஷன் நடந்து உள்ளது …. டாக்டர்கள் அந்த குழந்தையின் நிலை குறித்து கவலை கிடமாக அறிவித்துள்ளார்கள்…..தயவு செய்து இந்த குழுவில் இருக்கும் சகோதர சகோதரிகள் அந்த குழந்தையின் உடல் நலத்திற்க்காக இறைவனிடம் அதிகம் பிரார்த்தனை செய்யுமாறு உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்…
அந்த குழந்தைக்கு மருத்துவ உதவியாக 5000 ( ஐந்தாயிரம் ரூபாய்) ரூபாய் உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது…..
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம்)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர்: முனைவர் எம்.முகமத மூஸா…..
எல்லாப் புகழும் இறைவனுக்கே…..
Recent Comments