இறைவனின் திருப்பெயரால்….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
ஏக இறைவனின் உதவியை கொண்டு உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….
வரும் கல்வியாண்டின் 2024 ஜூன் மாதம் தொடக்கத்தில் பள்ளிகளில் படிக்க கூடிய மாற்று திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் சிரமத்தில் வசிக்கும் பெற்றோரின் குழந்தைகள் என 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவ மாணவிகளுக்கு
1.) பெரிய ஸ்கூல் பேக்
2.) கிரையன்ஸ் பனிரெண்டு கலர்கள் உள்ளடக்கிய பேக் : 1 ( ஒன்று )
3.) பவுச் : 1 ( ஒன்று )
4.) ஜெல் பேனா : 1 ( ஒன்று )
5.) பால் பென் பேனா : 1 ( ஒன்று )
6.) பென்சில் : 1 ( ஒன்று )
7.) ஸ்கேல் : 1 ( ஒன்று )
8.) லப்பர் : 1 ( ஒன்று )
9.) சார்ப்னர் : 1 ( ஒன்று )
10) பெரிய( லாங் சைஸ்) நோட்டுகள் 6( ஆறு)
11) தண்ணீர் பாட்டில் 1( ஒன்று)
12) பரிட்சை அட்டை 1 ( ஒன்று)
13) ஸ்கெட்ச் -12 கலர்கள் அடங்கிய ஒரு பேக்.
இத்தனை கல்வி உபகரணங்களை வழங்க உள்ளோம்…
இதற்க்கான மொத்த செலவு ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது.. இறைவனின் உதவியால் இதற்கு முதல் நபராக ஒரு சகோதரர் பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்
மேலும் தங்களால் இயன்றதை பொருளாகவோ அல்லது பணமாகவோ கூகுல் பே மூலமாக அல்லது டிடி யாகவோ அல்லது செக்காகவோ அனுப்பி உங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் அல்லது பொருட்களை வாங்கி வைத்தால் கூட நாங்களே வந்து நேரில் பெற்று கொள்கிறோம்…. நீங்க அனுப்பி வைக்கும் பணத்துக்கும் பொருளுக்கும் அதற்கு உண்டான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்….
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவிடுவார்கள் ( அல்குர்ஆன்:2:3)
மேலும் விபரங்களுக்கு
எல்லா புகழும் இறைவனுக்கே
Recent Comments