ஏகஇறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….
31-12-2024 செவ்வாய் கிழமை….
சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளிக்கு 26 வது மாதமாக வாடகை பணம் மேலும் தண்டையார்பேட்டையில் கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் சிரமத்தில் வசிக்கும் பெண்மணிக்கு 16வது மாதமாக 2500ரூபாய் வாழ்வாதார ( வாடகை) உதவியாகவும் தரப்பட்டது
மேலும் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் வயதான கூலி தொழிலாளிக்கும் சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவருடைய மனைவிக்கும் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவியாக 29 வது மாதமாக இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தஞ்சை மாவட்டத்தில் தந்தை மாற்றுதிறனாளியாகவும் மகன் மூளை வளர்ச்சி குன்றியவனாகவும் இருக்கின்றவர்களை வைத்து சிரம படும் தாய்க்கு வாடகை பணம் 1000 ரூபாய் மற்றும் மாற்று திறனாளி குடும்பங்கள். விதவை தாய்மார்கள். பிள்ளைகளால் கை விடப்பட்ட முதியோர்கள் என மாதந்தோறும் வழங்கிங்கொண்டிருக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 20 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பேக் 45குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும் மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் வயதான தம்பதிகளுக்கு வீட்டு வாடகை உதவியாக 1500 ரூபாய் வழங்கப்பட்டது.மேலும் சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் மழையின் காரணமாகவும் குளிருக்கு பயனளிக்கும் விதமாகவும் வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு 520போர்வைகள் மற்றும் 520பிரட் பாக்கெட் மற்றும் கிஸான் ஜாம் மற்றும் 500 மில்லி தண்ணீர் பாட்டில் என 520 நபர்களுக்கு வழங்கப்பட்டது….மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்தில் இரண்டு கால்கள் செயலிழந்து இருக்கும் சகோதரருக்கு இரண்டாவது மாதம் வீட்டு வாடகை உதவியாக 3000ரூபாயும் மற்றும் அவர் சிகிச்சைக்காக ஹாஸ்பிடல் சென்று வருவதற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையும் செய்து வருகிறேன் இறைவனின் உதவியால் இந்த மாதம் வழங்கப்பட்ட நிகழ்வுகள்…..
எல்லா புகழும் இறைவனுக்கே…
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் சேவரத்னா முனைவர் எம் .முகமது மூஸா…..
எல்லாப் புகழும் இறைவனுக்கே…..