நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..
மனிதர்களில் சிறந்தவர் அடுத்தவர்க்கு பயனளிப்பவரே!
இறைவனுக்கு மிக விருப்பமான செயல்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்துவது அல்லது அவனது ஒரு கஷ்டத்தை நீக்குவது அல்லது அவனது கடனை அடைப்பது அல்லது அவனின் பசியை போக்குவதாகும்!
23-4-2026 வியாழக்கிழமை
தஞ்சாவூர் மாவட்டம்..
சட்ட மன்ற தேர்தலின் காரணமாக உணவகங்கள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு நானும் எனது மாமாவும் இணைந்து காலை உணவாக 5 இட்லி,சட்னி, சாம்பார், 10நபர்களுக்கும் 3 இட்லி, சட்னி சாம்பார் 20நபர்களுக்கும், 500மில்லி தண்ணீர் பாட்டிலுடன் 30நபர்களுக்கு தஞ்சாவூர் பெரிய கோயில், சிவகங்கை பூங்கா, பழைய பேருந்து நிலையம், கோர்ட் ரோடு போன்ற பகுதிகளில் வழங்கினோம்…
ஏனைய அனைவரும் இதுபோன்ற நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவது எனது நோக்கம்…
எல்லாப்புகழும் இறைவனுக்கே…

Recent Comments