ஏக இறைவனின் திருப்பெயரால்…..

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

ஏப்ரல் (4)வது மாத நிகழ்வுகள்… தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து வரும் சகோதரிக்கு வீட்டு வாடகை உதவியாக 8வது மாதம்( 2000)ரூபாய் வாடகை பணம் தரப்பட்டும்.


மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை இழந்து நிலையில் பெரிய மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து அந்தம்மாவின் கிட்னியை மகனுக்கு பொருத்தி தொற்று பரவாமல் இருப்பதற்கு இருவரும் எங்கேயும் வெளியே செல்லாமல் மிகவும் சிரமத்தில் இருக்கும் இந்த குடும்பத்திற்கு 13வது மாதமாக மருத்துவ உதவி 1500 ரூபாயும் வழங்கப்பட்டது… தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய மாணவிக்கு மருத்துவ உதவி தொகையாக 5000ரூபாய் வழங்கப்பட்டது…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாதந்தோறும் வழங்கிங்கொண்டிருக்கும் 31 வகையான மளிகை பொருட்களும் 5கிலோ அரிசியும் வாங்குவதற்க்கு 30குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும் மேலும் அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை பெட்ரோல் கட்டணமின்றி டிரைவர் கட்டணமின்றி இறைவனின் உதவியால் நடைப்பெறுகிறது..ஆம்புலன்ஸ் இன்சூரன்ஸ் 15,496ரூபாய் செலுத்தப்பட்டது..

சட்ட மன்ற தேர்தலின் காரணமாக உணவகங்கள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் சாலையோரம் இருகக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு
காலை உணவாக 5இட்லி, சட்னி, சாம்பார் 10நபர்களுக்கும், 3இட்லி, சட்னி, சாம்பார் 20நபர்களுக்கும் 500மில்லி தண்ணீர் பாட்டிலுடன் 30நபர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டது…. இறைவனின் உதவியால் ஏப்ரல் (4)வது மாதம் வழங்கப்பட்ட நிகழ்வுகள்…..
எல்லா புகழும் இறைவனுக்கே…

இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…

( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )

தாய் தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல், வாழ்வாதார உதவி, மருத்துவ உதவி, மாதம் இரண்டு முறை சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடேபிள் பிரியாணி வழங்குதல்,குளிர்காலங்களில் போர்வை&பிரட்&ஜாம் வழங்குதல், மழைக்காலங்களில் பிரட்&ஜாம்&தண்ணீர் பாட்டில் வழங்குதல், மாதந்தோறும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குதல், பெட்ரோல் கட்டணம் கிடையாது டிரைவர் கட்டணம் கிடையாது முற்றிலும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தமிழ்நாடு முழுவதும் வழங்கிக்கொண்டிருக்கிறோம்… நீங்களும் உதவி செய்ய விரும்பினால் 9600174634 இந்த நம்பருக்கு கூகுள்பே அல்லது போன் பே மூலியமாக உதவி செய்யலாம்….

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *