ஏக இறைவனின் திருப்பெயரால்…

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக…

யார் கல்வியை தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்க்கு செல்லும் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்
(நூல்:முஸ்லீம் 5231)

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

27-5-2026 புதன்கிழமை
சென்னை மதுரவாயல்

தாய் தந்தையை இழந்த குழந்தைகள், தாயோ அல்லது தந்தையையோ இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் என 200குழந்தைகளில் முதல் கட்டமாக 50மாணவ மாணவிகளுக்கு மாலை சிற்றுண்டியாக நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில்கள் வழங்கி கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது…

வழங்கப்பட்ட
கல்வி உபகரண பொருட்கள்
1)பெரிய பேக்-1
2)லாங் சைஸ் நோட்டுகள் -5
(கோடு போட்ட நோட்டுகள் -2
கோடு போடாத நோட்டுகள் -2
ஒன் சைடு நோட்டு-1)
3)பரிட்சை அட்டை-1
4)1லிட்டர் தண்ணீர் பாட்டில் -1
5)பெரிய ஜாமண்ட்ரி பாக்ஸ் -1
அதில் இருக்கக்கூடிய பொருட்கள் =

(* அளவுகோல் (Ruler / Scale):

  • கம்பாஸ் (Compass – கவராயம்):
  • டிவைடர் (Divider – பிரிப்பான்):
  • பாகைமானி (Protractor / D):
  • மூலைமட்டங்கள் (Set Squares):
  • அழிப்பான் (Eraser) & துருவி (Sharpener):
  • சிறிய பென்சில் (Small Pencil): .)
    6)பிரவ்ன் சீட் ரோல் -1
    7)ஜெல் பேனா-1
    8)பால்பென் பேனா -1

இதற்கு பொருளாதாரம் தந்து உதவி நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

இந்த பணிகள் மென்மேலும் சிறப்படைவதற்க்கும் மாணவ மாணவிகள் மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி இரண்டிலும் வெற்றி பெறுவதற்க்கும் இறைவனிடம் துஆ செய்யுங்கள்…

எல்லாப்புகழும் இறைவனுக்கே…

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *