4-6-2026 வியாழக்கிழமை
தஞ்சாவூர் மாவட்டம்அய்யம்பேட்டையில்
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…
தாய் தந்தையை இழந்த குழந்தைகள், தாயோ அல்லது தந்தையையோ இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் என 200குழந்தைகளில் முதல் கட்டமாக 27-5-2026 சென்னை மதுரவாயலில் 50 மாணவ மாணவிகளுக்கும்
இரண்டாம் கட்டமாக 1-6-2026 தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 மாணவ மாணவிகளுக்கும் மூன்றாம் கட்டமாக
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் 50மாணவ மாணவிகளுக்கு *சிறப்பு அழைப்பாளராக * நெடுவை சரவணன் தேசிய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் மற்றும் *பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் அவர்கள் முன்னிலையில் * முனைவர் M. முகமது மூசா பவுண்டர் &நிறுவனத்தலைவர் அவர்கள் கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்கள்…
இதுவரை மூன்று கட்டங்களாக மொத்தம் 160மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது..
வழங்கப்பட்ட
கல்வி உபகரண பொருட்கள்
1)பெரிய பேக்-1
2)லாங் சைஸ் நோட்டுகள் -5
(கோடு போட்ட நோட்டுகள் -2
கோடு போடாத நோட்டுகள் -2
ஒன் சைடு நோட்டு-1)
3)பரிட்சை அட்டை-1
4)1லிட்டர் தண்ணீர் பாட்டில் -1
5)பெரிய ஜாமண்ட்ரி பாக்ஸ் -1
அதில் இருக்கக்கூடிய பொருட்கள் =
(* அளவுகோல் (Ruler / Scale):
- கம்பாஸ் (Compass – கவராயம்):
- டிவைடர் (Divider – பிரிப்பான்):
- பாகைமானி (Protractor / D):
- மூலைமட்டங்கள் (Set Squares):
- அழிப்பான் (Eraser) & துருவி (Sharpener):
- சிறிய பென்சில் (Small Pencil): .)
6)பிரவ்ன் சீட் ரோல் -1
7)ஜெல் பேனா-1
8)பால்பென் பேனா -1
இதற்கு பொருளாதாரம் தந்து உதவி நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
(இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்ற நற்க்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
எல்லாப்புகழும் இறைவனுக்கே…



Recent Comments